Tuesday, 28 June 2011

The AUTianz History


வணக்கம் தோழர்களே!

இந்த வாரம் நாம் பூரிப்படைய சில நல்ல செய்திகள் உள்ளன. நமது AUTitanz மின்னிதழ் நம் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அங்கீகரிக்கபட்டுள்ளது. பெரும் முயற்சிகளாலும், நீண்ட நாள் தேடலின் பயனாகவும் இது சாத்தியமாகியிருக்கின்றது.

எனவே இவ்வாரம், இதுவரை நாம் கடந்து வந்த பாதைகளை சற்று திரும்பிப்பார்ப்பது இந்நேரத்தில் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

AUTitanz தோன்றிய வரலாறு! 

நம் அண்ணா தொழில்நுட்பப்  பல்கலைக்கழக மாணவர்களை இணைத்து, அவர்களாலேயே நடத்தி நிர்வகிக்கப்படும் ஒரு பத்திரிகை இதழை ஏன் துவக்கக்கூடாது? என்ற கேள்வி பல பதில்களோடு இன்று உங்கள் முன் சாத்தியமாக ஜொலிக்கின்றது! எழுந்த சிந்தனையை காற்றோடு கலந்து, மறந்துவிடக்கூடாது என்றெண்ணி நண்பர்களிடம் உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தேன். பலரிடம் இருந்து செய்யலாமே!என்ற நேர்மறையான பதில் வந்தது. சிலர் அதைப்பற்றி விளக்கமாக கூறுமாறு பணிந்தார்கள். ஆனால் எவரும் வேண்டாம் என்றோஇது ஆகிற கதை இல்லஎன்றோ சொல்ல வில்லை. முதலில் இந்த சிந்தனைக்கு ஊக்கம் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அடுத்து எதற்காக இம்மின்னிதழை நடத்த வேண்டும் என்ற கேள்வி அவ்வப்போது மனத்திரையில் வந்து போயிற்று. அனைவரும் நல்ல கருத்துக்களை கற்றுக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் தயாராகவும், ஆர்வமாகவும் இருப்பார்கள் என்ற அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டு துணிந்து செயலில் இறங்கினோம்.செய்யலாமே!என்றவர்களிடம் என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று மேலும் சில குறுஞ்செய்திகளை அனுப்பி விசாரித்ததில், சற்று தாமதமேயானாலும் தொடர்ந்து பதில்கள் வந்தவண்ணம் இருந்தன.

கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்வதாகவும், நம்மைச்சுற்றி உள்ள பிற கல்லூரிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் பகிர்வதாகவும், புதிய தொழில்நுட்பங்களை எடுத்துக்கூறுவதாகவும், மாணவர்களின் தனித் திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய ஒரு ஊடகமாகவும், பல்வேறு துறை சார்த்த மாணவர்கள் தங்களது நுணுக்கங்களை மற்ற துறையினரிடம் பகிர்ந்து கொள்ளத்தக்கதுமான ஒரு இதழாக இருக்க வேண்டும் என்றவாறு சில பதில்கள் வந்தன. இதழின் இயல்பைப் பற்றி யோசித்த போது, மின்னிதழ் என்ற தேர்வு அச்சு இதழ் என்பதை விட சிறந்ததாகத் தோன்றியது. காரணம், மின்னிதழ் நடத்துவதற்கு பொருளுதவி ஏதும் தேவையானதாக இருக்காது. மனித வளத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இணையத்தில் உள்ள வசதிகளின் உதவியுடன் மின்னிதழ் ஒன்றைத் துவங்க முடிவு செய்தோம்.

இத்தருணத்தில் இம்மின்னிதழின் துவக்ககால செயல்பாடுகளில் உறுதுணையாக இருந்த சில நண்பர்களை நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் தற்போது நான்காம் ஆண்டு EEE மாணவர்களாக  இருக்கும் Askerbarathi மற்றும் Harini ஆகியோராவார். மின்னிதழின் பெயர் தேர்வு செய்ததிலும், அதை Blogspot வழியாக பிரசுரிக்கலாம் என்ற தகவல்களையும் தந்தவர்கள் இவர்களே. தற்போது ஒரு புத்தகத்தைப பக்கங்களைப் புரட்டிப்படிப்பது போன்ற ஒரு வசதியை செய்து கொடுக்கும் Issuu தொழில் நுட்பமும் இவர்கள் கூற நாம் கற்றுக்கொண்டதேயாகும். மின்னிதழ் பதிப்புகளை, PDF வடிவில் பகிர்ந்து கொள்ள உதவும் Google Docs மற்றும் Google Sites வசதிகளைப் பற்றிய செய்திகள் யாவும் இவர்கள் இணையத்தில் உலவி கண்டரிந்தவையே. எனவே AUTitanz இன் வளர்ச்சியில் இவர்கள் ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

பெயர்க்காரணம்:

AUTitans –அதாவது Anna University Titans (அண்ணா பல்கலைக்கழக மேதாவிகள்) என்ற பெயரே பிறகு ஒரு மாறுதலுக்காக AUTitanz (அபமேதாவிகழ்) என்றானது. இந்த பெயரும் நாங்கள் கலந்தாலோசித்து ஒரே நாளில் உருவாக்கிய வார்த்தையாகியது. இதுவே நாங்கள் தொடச்சியாக உருவாக்கிய வலைப்பூவுக்கும் (Blogspot), முகநூலுக்கும் (Facebook), குற்றோலிக்கும் (Twitter) பெயராகிப்போனது.

மின்னிதழ் கட்டுமானம்: சவால்களும் சாமர்த்தியமும்!

மின்னிதழ் என்ற ஒன்று இணையத்தில் அனைவருக்கும் கிடைக்கும் படியாக இருக்க வேண்டும் என்றால் வலைத்தளம் ஒன்றை உருவாக்க வேண்டுமா என்ற சந்தேகம் நம் மாணவர்களில் பலரிடையே எழுந்தது. Google இன் Blogger  உதவியுடன் வலைப்பக்கங்களுக்கு மாற்றாக வலைப்பூ ஒன்றை உருவாக்க முடியும் என்ற செய்தி எங்களுக்கு இணையத்தில் இருந்து அறியக்கிடைத்தது. உடனடியாக autitanz.blogspot.com என்ற வலைப்பூ ஒற்றை உருவாக்கினோம். தற்போது Blogger இல் ஒரு வலைப்பூவை நீங்கள் உருவாக்கினால் அதில் அதிகபட்சமாக பத்து பக்கங்களை (Tabs)  உருவாக்கிக் கொள்ளலாம். நம் வலைப்பூவில் Home, Editorial Board, Gallery, Downloads & Contact us என்ற 5 பக்கங்கள் தற்போது உள்ளன.

பக்கங்களை உருவாக்கிய பின்னர் மின்னிதழை எந்த வடிவில் கொண்டு வரலாம் என்ற ஒரு சந்தேகம் எழுந்தது. வலைப்பூவிலேயே மாணவர்கள் எழுதும் கட்டுரைகளை ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து விடலாம் என்று சிலர் கூறினர். ஆனால் அது படிப்பதற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும், ஒரு Fileஆக சேமித்து எடுத்து செல்ல ஏற்றதாகவும் இராது என்பதால் PDF வடிவில் இதை பிரசுரிக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

PDF கோப்புகளைப் பொறுத்தவரையில் எண்ணற்ற சாதகங்கள் உள்ளன. தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றப்படும் கட்டுரைகளை, எந்த எழுத்துருவில் (Font) இருந்தாலும், அவற்றின் வடிவமும் கட்டுமானமும் (Alignment) சிதைவடையாமல் பாதுகாப்பாக சேமித்துக்கொள்ள முடியும்.

Microsoft Officeஇன் Publisher 2010 என்ற மென்பொருளை அடிப்படையாக வைத்து, ஒரு பத்திரிக்கையை எவ்வாறு வடிவமைப்பது என்பதையும் கற்றுக்கொண்டோம். [Publisher 2007 ஐ விடPublisher 2010 Versionஇல் அதிக வசதிகள் இருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்தோம். மேலும் Office 2007ஐப் போல் இல்லாமல் Office 2010இல் PDF Conversionஇற்கு Add-inகள் ஏதும் தேவைப்படாது. இயல்பாகவே Office  2010இல் அந்த வசதி உள்ளதால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.]அந்த சமயத்தில்தான் புதிய தலைமுறைவார இதழ் தமிழகமெங்கும் பத்திரிகை உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும் புரட்சியையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தது. தரமான நல்ல கருத்துக்களையும், மிகவும் அழகான பக்க வடிவமைப்பையும் கொண்ட புதிய தலைமுறையை நாங்கள் ஒரு முன் மாதிரியாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். எங்களுக்கு இந்த முனைப்பை ஏற்படுத்திய புதிய தலைமுறை வார இதழுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இப்போது PDF Fileகளை எவ்வாறு பதிவேற்றம் (Upload) செய்வது என்ற சவால் எங்கள் முன் எழுந்தது. இணையத்தில், PDF கோப்புகளை சேமித்து வைக்க உதவும் வலைத்தளங்களை தேடி அலைந்தோம். இறுதியாக Google Docs என்ற தளத்தின் உதவியால் பல்வேறு வகை கோப்புகளையும் பதிவேற்றம் செய்து, அதை இணையத்தில் எவருடனும் பகிரலாம் என்ற நற்செய்தி கிடைத்தது. முதன்முதலாக ஒரே ஒரு முகப்பு பக்கத்தை மற்றும் கொண்ட ஒரு PDF fileஐ பதிவேற்றம் செய்து பார்த்ததில் ஒரு சிறிய ஏமாற்றம்... பதிவேற்றம் செய்த கோப்பின் படத்தின் தரம் (Image Quality) வெகுவாகக் குறைந்து விட்டது. படங்களும் எழுத்துருக்களும் சிதைந்து போன மாதிரி தோற்றமளித்தன.

இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் ஒரு கனம் இம்முயற்சியைக் கைவிடலாமா என்று கூட எண்ணத் தோன்றியது. காரணம் வண்ணமயமான இம்மின்னிதழின் தோற்றமே வாசகருக்கு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய முக்கியமான காரணியாக இருக்கையில், அதில் ஏற்படும் சிக்கல்கள் மிகக் கடினமானவையாக இருந்தன. சில நாட்களுக்குப் பிறகு திடீரென மின்னல் போன்றதொரு யோசனை பளீரென ஏற்பட்டது. கோப்புகளை ஏன் ZIP Fileகளாக மாற்றி பதிவேற்றம் செய்யக்கூடாதென தோன்றிற்று.

மறுநாளே Google Docsஇல் ZIP Fileகளை பதிவேற்றம் செய்ய இயலுமா என்று சோதித்துப் பார்த்ததில், வெற்றி! பிரகென்ன, புதிய உற்சாகத்துடன் வேலைகளைத் துவங்கினோம்.

AUTitanzஇன் முதல் இதழ் 07.07.10 அன்று வெளியானது. இதுவரை மொத்தமே 5 இதழ்களே வெளியாகியுள்ளன. முதல் இரு இதழ்களுக்குபிறகு Google Docsகு பதிலாக, GGoogle Sites ஐ பயன்படுத்தி மின்னிதழ்களைப் பதிவற்றம் செய்தோம். முன்னதைக் காட்டிலும் சற்று எளிதாகவும், பதிவிறக்கம் செய்ய ஏற்றதாகவும் இது இருந்தது. போதுமான ஆட்கள் இல்லாமை மற்றும் வேலைப் பளுவினால் இடையிடையே AUTitanz வெளியாவதில் இடையூறுகள் இருந்த வண்ணமே இருந்தன. நடுநடுவே சில வாரங்கள் தொடர்ச்சியாக வெளியீடு இல்லாமல் இருந்து, எங்களுக்கும் உங்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதற்காக எங்களை மன்னிக்கவும். அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியான பின் இது முழுமையான இயக்கமாக மாறும் என்பது உறுதி!

4வது இதழுக்குப் பின் ஒரு அழகிய மாற்றம் நிகழ்ந்தது. மின்னிதழ்களைப்  புத்தக வடிவில், பக்கங்களைப் புரட்டிப் படிக்குமாறு உதவும் ISSUU என்ற வலைதள உதவியுடன் மெருகேற்றினோம். பின் அனைத்து 5 பதிவுகளையும் அவ்வாறே மாற்றினோம்.

AUTitanzஇன் 5வது மற்றும் சமீபத்திய பதிப்பு 24.09.10 அன்று வெளியானது. அதற்குப் பிறகு 4 மாத காலம் கடந்து விட்டது. தேர்வுகள் மற்றும் பிற INNOVAUTT போன்ற நிகழ்வுகளால் AUTitanz இல் அதிக நேரம் செலவிட முடியாமல் அதன் வேலைகள் நின்றுவிட்டன.

ஆயினும், இப்போது மீண்டும் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்த அதே உற்சாகத்துடன் வேலைகளை ஆரம்பிக்க வேண்டிய நிலை கூடிய விரைவில் வரப்போகிறது என எதிர் பார்ப்போம்.

சமீபத்தில் வலைப்பதிவின் புதிய வடிவம் The AUTianz என பெயர் மாற்றப்பட்டுள்ளது. வலைப்பதிவின் வடிவமைப்பு மற்றும் மின்னிதழின் வேலைகள் துவங்கியவுடன் இப்புதிய முகவரியான theautianz.blogspot.com என்பதே நிரந்தரமாக இருக்கும்.

நன்றி!

2 comments:

  1. மிக மிக அருமையான சிந்தனை, சிந்தித்ததை உடனடியாக செயல்படுத்தியதற்காக உங்களுக்கு எனது நன்றிகள். தொழில்நுட்ப ரீதியிலான உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் என்னை கேளுங்கள் என்னால் முடிந்த வரை செய்கிறேன், மின்னஞ்சல் முகவரியை இங்கே குறிப்பிட இயலாது எனது ப்ளாக்கர் ப்ரொஃபைலில் பார்த்து குறித்துக்கொள்ளுங்கள். இந்த தளத்தை பிரமலமடைய வைக்க என்னாலான முயற்சிகளை எடுப்பேன். http://vigneshms.blogspot.com.

    ReplyDelete
  2. தங்கள் பாராட்டுக்கு நன்றிகள்:)
    Facebook இல் எங்களது பக்கத்தை விரும்பவும்

    www.facebook.com/theautianz

    எங்களுடன் இணைய முக நூலைப் பயன்படுத்தவும்.

    ReplyDelete

Your feedback and suggestions will be very much helpful to us in enhancing the experience of The AUTianz